வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பாதையில், ஏற்கனவே கால்வாய் மூடி உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் கழிவுநீர் கால்வாய் மூடி உடைப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்களின் சக்கரங்கள் இந்தப் பள்ளத்தில் சிக்கக் கூடிய நிலை இருப்பதால், கால்வாய் மூடியை தரமாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், வேலூர்.