அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தை அடுத்த அரசு மருத்துவமனை, ஒரு தனியார் பள்ளி அருகே பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறியது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை மூடியை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
மணிகண்டன், அரக்கோணம்