ஆரணிைய அடுத்த எஸ். வி. நகரம் ஊராட்சியில் மந்தவெளி தெருவில் சாலை அமைக்கும் பணி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நடந்து வருவதாக தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் சர்வேயர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ராகவன், ஆரணி