தெருவில் செல்லும் கழிவுநீர்

Update: 2022-08-26 11:07 GMT

வேலூர் சைதாப்பேட்டை 36-வது வார்டுக்கு உட்பட்ட எடத்தெருவில் உள்ள கால்வாயில் அடைப்பு காரணமாக கழிவுநீர் தெருவில் செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதியுடன் சென்று வருகின்றனர். மேலும் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலமோகம், வேலூர்

மேலும் செய்திகள்