தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-12-22 20:12 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பேராயம்பட்டு கிராமம். இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கிழக்குத் தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் வசிப்பவர்கள் அடிக்கடி உடல் நலப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற முன்வர வேண்டும்.

-சிவசங்கர், பேராயம்பட்டு. 

மேலும் செய்திகள்