வேலூர் கன்சால்பேட்டை எதிரே உள்ள ஒரு சினிமா தியேட்டர் மற்றும் மசூதிக்கு அருகில் 10 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் கொசுக்கள் உற்பத்தியாக டெங்கு பரவும் வாய்ப்புள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோகுலகிருஷ்ணன், கல்சால்பேட்டை. வேலூர்.