நெமிலி தாலுகா மேல்களத்தூர் கிராமத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், வீடுகளில் பயன்படுத்தப்படும் நீரும் எந்நேரமும் தெருவில் ஆறாக ஓடுகிறது. அந்த நீர் தெருவில் உள்ள பள்ளங்களில் குட்டை குட்டையாக தேங்கி உள்ளது. அதில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சிறுவர், சிறுமிகள் தெருவில் விளையாட முடியாமல் அவதிப்படுகிறார்கள். எங்கள் தெருவில் இருபக்கமும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
-வக்கீல் செ.பழனி, மேல்களத்தூர்.