வாலாஜா தாலுகா அலுவலகம் எதிரில் குப்பைகள் குவிந்துள்ளது. கழிவுநீரும் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கால்வாய் கட்டாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் கட்டித்தர முன்வர வேண்டும்.
-த.நித்தியானந்தம், காரை.