ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கால்வாய்களில் கழிவுநீர் ஓடாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாய் ஓரம் சாலையில் கழிவுநீர் வழிந்தோடி மழைநீருடன் கலந்து தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.
-முருகன், ஆற்காடு.