கழிவுநீர், பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-08-06 11:44 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சியில் புதுப்பேட்டை புதுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்ல ஏற்கனவே உள்ள கால்வாயை அகற்றி புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தற்போது கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி முடிந்து, சாலையின் குறுக்கே சிறிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பாலம் கட்டும் பணியால் தெருவில் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். பொதுமக்கள் நலன்கருதி கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கார்த்திகேயன், புதுப்பேட்டை

மேலும் செய்திகள்