கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்

Update: 2022-08-08 13:17 GMT

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் குடியிருப்பில் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் அங்குள்ள காலிமனைகள், குடியிருப்புகளில் வழிந்தோடி குளம்போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளது. அங்குள்ள கால்வாயை தூர்வாரி, கழிவுநீரை வடிய வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ராம்பிரகாஷ், அரக்கோணம்

மேலும் செய்திகள்