பேரணாம்பட்டில் குடியாத்தம் நெடுஞ்சாலையோரம் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோருக்கு சிரமமாக உள்ளது. விபத்துகளும் நடக்கின்றன. குடியாத்தம் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.