வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜே.பி.சாலையில் மாநகராட்சி பூங்கா அமைத்துள்ள பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தெரு சாலை முழுவதும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.பிலோமினா ஆஸ்டின், வேலூர்.