கழிவுநீர் தேங்கும் அவலம்

Update: 2023-07-09 17:29 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை உள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்தவெளியில் உள்ள கால்வாயில் செல்கிறது. மேலும் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் செல்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசுகிறது. பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், கால்வாயை மூடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்