கழிவுநீர் தேங்கும் அவலம்

Update: 2022-09-09 11:56 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையத்தை அடுத்த ஸ்ரீராம்நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற‌ முறையாக கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதி கழிவுநீர் முழுவதும் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும். தற்போது சாலையில் உள்ள கழிவுநீரை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பாலமுருகன், கொண்டபாளையம்.

மேலும் செய்திகள்