வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே உள்ள விவேகானந்தர் முதல் தெருவில் ரேஷன் கடை உள்ளது. அதன் அருகே கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டுமல்லாமல் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வசந்த், சத்துவாச்சாரி.