திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு ரவுண்டனா அருகே 2 பக்கமும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. அருகில் திருமண மண்டபம், துணிக்கடை உள்ளது. ஏராளமானோர் வந்து செல்லும் இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் குண்டும் குழியில் இறங்கி செல்லும்போது, கழிவுநீர் அருகில் உள்ள பொதுமக்கள் மீது தெளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. பல மாதங்களாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைத்து, கழிவுநீர் ஓடுவதை தடுக்க வேண்டும்.
-சுவாமிநாதன், திருப்பத்தூர்.