வாணியம்பாடி ரெயில்வே மேம்பாலம் வழியாக ரெயில் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் பொதுமக்கள், பயணிகள் சென்று வருகின்றனர். ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவியரசன், வாணியம்பாடி.