வேலூர் நேதாஜி மார்கெட்டில் மணிக்கூண்டில் இருந்து மார்க்கெட் உள்ளே செல்லும் வழியில், மசூதி அருகே உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேல் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மழை பெய்ததால் மோசமான நிலையில் காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாகீர்கான், வேலூர்.