கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-10-20 20:32 GMT

வாலாஜா பஸ் நிலையத்தில் கட்டண கழிவறை உள்ளது. இந்தக் கழிவறையில் இருந்து கழிவுநீர் வெளியேறி நேரடியாக பஸ் நிலையம் பின்பக்கம் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராஜேஷ், வாலாஜா.

மேலும் செய்திகள்