சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-05-28 16:44 GMT

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அடைப்பு மற்றும் தூர்ந்துபோய் உள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலையோரம் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலை ஓரமாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் தேங்கும் கழிவுநீரை அகற்றவும், கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேதுமாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்