நடைபாதையில் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்

Update: 2026-05-03 18:38 GMT

வேலூர்-காட்பாடி சாலையில் ஆஸ்கார் தியேட்டர் அருகில் நடைபாதையில் கழிவுநீர் கால்வாயில் மூடி (சிமெண்டு சிலாப்) இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. சிமெண்டு சிலாப் மூடி இல்லாமல் திறந்த நிலையில் காட்பாடி-சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வரை உள்ளது. நடைபாதையில் மின் விளக்குகள் இல்லை. இரவில் செல்வோர் தவறி கால்வாயில் விழும் சம்பவங்கள் நடக்கலாம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய் மீது சிமெண்டு சிலாப் மூடி போட்டு தெரு விளக்குகள் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.ராமு, கோபாலபுரம் விரிவு, காட்பாடி. 

மேலும் செய்திகள்