நோய் பரவும் அபாயம்

Update: 2026-10-11 09:44 GMT

பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி வாஷிங்டன் நகர் பகுதியில், சாக்கடை கால்வாய் உடைந்து, கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் அந்தபகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது கழிவுநீர் தெளிப்பதால், அவர்களால் பிற இடங்களுக்கு செல்ல முடியவில்லை. உடைகளை மாற்றினால் மட்டுமே அடுத்த பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், கழிவுநீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

குமார், கணக்கம்பாளையம்.

மேலும் செய்திகள்