கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள சின்னகுளத்துப்பாளையம் ரெயில்வே கேட் அருகில் இருக்கும் பெரிய சாக்கடை கால்வாயில் பல ஆண்டுகளாக குப்பைகள் தூர்வாரப்படாமல் இருப்பதால், குப்பைக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை நீர் வீட்டினுள் புகுந்து வீட்டை அசுத்தப்படுத்துவதுடன், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.