பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மண் மூடியும், புதர் மண்டியும் இருக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே காலதாமதம் இன்றி கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.