கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தின் ராமு தெருவில் 50 வீடுகள் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவு நீர் செல்ல வழியில்லாததால் வீடுகள் முன்பு தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் வடிகால்வாய் அமைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.