ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே பூதநாதசிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் எதிரே கழிவுநீர் வடிகால் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் வடிந்தோட வழியின்றி சாலையில் பாய்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும் பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர். எனவே, பக்தர்கள் நலன்கருதி ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.