கள்ளிப்பட்டி கனரா பேங்க் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?