அடிபம்பு அருகே கழிவுநீர் தொட்டிகள்

Update: 2026-06-14 11:11 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், இனாம் குளத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பொது அடிபம்பின் அருகே கழிவறையும், இரண்டு கழிவுநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அடிபம்பு நீர் அசுத்தமடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. மேலும், அடிபம்பைச் சுற்றிலும் கற்கள் நிறைந்து காணப்படுவதால் தண்ணீர் எடுக்க வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, கழிவுநீர் தொட்டிகளை அகற்றி, அடிபம்பு பகுதியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்