தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-06-07 16:46 GMT
வழுதரெட்டி பஸ் நிறுத்தம் எதிரே எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள விழுப்புரம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருவது மட்டுமின்றி அதன் வழியாக கழிவுநீர் கலந்து மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்