ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் பள்ளிக்கூட தெரு முகப்பில் இறைச்சிக்கடை எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதில் சரியாக கழிவுநீர் ஓடவில்லை. இதுசம்பந்தமாக தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்வதாக கூறி பள்ளம் தோண்டினார்கள். ஆனால் கால்வாயை சீரமைக்காமல் பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அங்கு விபத்துகள் ஏற்படும் வகையில் மேடும், பள்ளமுமாக உள்ளது. தோண்டப்பட்ட கால்வாயை நகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?
-கந்தசாமி, ஆரணி.