மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு கோச்சடை பகுதியில் கோவிலுக்கு அருகில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அவ்வழியே கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இதில் எழும் துர்நாற்றத்தால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பார்களா?