சுகாதார சீர்கேடு

Update: 2026-06-21 07:39 GMT

திட்டுவிளை புதிய பஸ் நிலையத்தில் அங்கு வரும் பயணிகள் பயன்பாட்டிற்காக கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறைகளின் செப்டிக் டேங்க் நிரம்பி பஸ்நிலையம் வழியாக வடிந்தோடி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் தோற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றிட வேண்டும.

-சாகுல் ஹமீது, திட்டுவிளை.

மேலும் செய்திகள்