சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சில கிராமங்களில் கழிவுநீர் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் வாறுகாலில் குப்பைகள், பாலீத்தின் பைகள் உள்ளிட்டவை தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?