தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-05-31 13:12 GMT

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தெருவில் கழிவுநீரில் நடந்துசெல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மழைநீருடன் கழிவுநீர் கலந்து இருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்