பகண்டை கூட்டு ரோடு பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் 3 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படு்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.