தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-05-03 15:38 GMT

சித்தோடு வாய்க்கால்மேடு பழைய பரோடா வங்கி பின்புறம் கம்பம் நடுவதற்காக போடப்பட்டுள்ள கற்கள் சாக்கடை கால்வாயில் கிடக்கிறது. இதனால் கடந்த 3 மாதங்களாக கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. எனவே கற்களை அகற்றி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்