பரமத்திவேலூரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாக்கடை நீர் நேரடியாக ராஜா வாய்க்காலில் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சாக்கடை நீர் ராஜா வாய்க்காலில் கலப்பதை தடுத்து சுத்திகரிப்பு செய்து பின்னர் வாய்க்கால்களில் விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.