புகார் எதிரொலி

Update: 2026-03-22 12:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை 1-வது பிரதான சாலையின் நடுப்பகுதியில் சாலை போடுவதற்கான வேலை தொடங்கப்பட்ட பணி முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலை பணியை விரைந்து முடித்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்