பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய்

Update: 2026-03-08 12:17 GMT

கெங்கவல்லி இந்திரா நகர் 3-வது வார்டு பகுதியில் அரசினர் ஆதிதிராவிடர் விடுதி அருகே உள்ள 2 வீதிகளுக்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் பிரதான சாலையில் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாயின் மீது சிமெண்டு சிலாப்பு அமைக்கும் பணியை முழுமையாக முடிக்காமல் இருபுறமும் பள்ளமாக விட்டுவிட்டனர். 3 மாதங்கள் ஆகியும் தற்போது வரை இதற்கான நடவடிக்கை எடுக்காமல் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் பிரதான சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்போதுதான் தீர்வு வருமோ?

மேலும் செய்திகள்