கரூர் மாவட்டம் கிருஷ்ணராயாபுரம் ஒன்றியம் கள்ளப்பள்ளி ஊராட்சி 1-வது மெயின்ரோடு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலையில் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.