கிடப்பில் போடப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி

Update: 2026-01-11 11:56 GMT

கரூர் மாவட்டம் கொங்கு நகர், அம்மன் நகர் வடக்கு பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து செல்வதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலையில் செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கால்வாய் அமைக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு சிமெண்டு கொட்டப்பட்ட நிலையில், பணிகள் முழுமையாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்