‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-01-11 11:25 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கப்பாளையம் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்ற நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கால்வாய் முழுமையாக அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் பணியை விரைந்து முடித்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் ,நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்