விழுப்புரம் வெங்கடாசலம் தெருவில் (கண்ணகி தியேட்டர் பின்புறம்) உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.