சென்னை, பெரியமேடு எவரெஸ்ட் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைமூடிகள் சேதமடைந்து பாதசாரிகளுக்கு ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகிறார்கள். மேலும் இந்த நடைபாதையின் நடைமேடை கற்களும் பெயர்ந்து, பாதசாரிகள் நடக்க முடியாதவாறு அலங்கோலமக கிடக்கிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.