கோவையை அடுத்த மதுக்கரை மலைச்சாமி கோவில் வீதி மற்றும் சின்னைய கவுண்டர் வீதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் உள்ளது. ஆனால் அதில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர், அருகில் உள்ள நிலத்தில் வெளியேறி தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிவுநீரை அகற்றி கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும்.