செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் ஊராட்சி மேல்மணம்பாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சேதமடைந்த சாலைகளில் மழைக்காலங்களில் தெப்பக்குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் குறித்த அச்சம் நிலவுகிறது. கிராம மக்களிடையே தொற்று நோய் பரவாமல் இருக்க, சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும் புதிய சாலை அமைக்கப்படவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.