தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2025-11-23 16:48 GMT

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டி ஊராட்சி 4-வது வார்டு கிருஷ்ணா நகர் 1-வது தெரு பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு போதிய கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் டெங்கு, மலேரியா போன்று தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகரித்து வருகிறது.. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து கூடுதல் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்