நோய்த்தொற்று பரவும் அபாயம்

Update: 2025-11-02 15:16 GMT

நிலக்கோட்டை தாலுகா முத்தாலபுரம் கிழக்கு தெருவில் அங்கன்வாடி மையம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. அதன் அடியில் குப்பைகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்