திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் கோபாலசமுத்திரகுளத்தின் வடகரை பகுதியில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடை கால்வாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.